Thursday, April 2, 2009

warisurimai

வாரிசுரிமை
வாரிசுரிமை மனித வாழ்வில் பொருள், செல்வத்துடன் தொடர்பான விவகாரங்களில் வாரிசுரிமையூம் முதன்மையிடத்தைப் பெறுகின்றது. இவ்வகையில் இஸ்லாத்தின் பொருளாதாரக் கோட்பாடுகளுள் வாரிசுரிமையானது ஒரு தனியிடத்தைப் பெற்றுள்ளது. அரபு மொழி வழக்கில் பராயிழ் என்ற பதத்தால் இவ் வாரிசுரிமை வழங்கப்படுகின்றது.(பர்ழ்) கடமையாக் கப்பட்டது, பங்கு பிரிக்கப்பட்டது, தௌpவாக்கப்பட்டது என இப்பதம் கருத்துணர்த்துகின்றது. இஸ்லாமிய வழக்கில் பராயிழ் என்பது ஒரு முஸ்லிம் இறந்த பின்னர் விட்டுச் செல்கின்ற சொத்துக்கள் (அவரின் பின்னர்) யார் யாரைச் சென்றடைய வேண்டும் என்பதை பங்குபிரித்துக் காட்டும் சட்ட அமைப்பு முறையாகும். வாரிசுரிமையானது பராயிழ் தவிரவூம்இ இல்முல் மீராஸ்இ அல் வராஸத் அத்தரிகா எனும் பதங்களாலும் இஸ்லாமிய சட்டத்துறையில் அழைக்கப்படுவதுண்டு. இது குறித்து வந்துள்ள அல்குர்ஆன் வசனங்கள் திரும்பத் திரும்ப பல்வேறு சந்தர்ப்பங் களில் தௌpவாக்கப்பட்டதுஇ கடமையாக்கப்பட்டது எனக் கூறுவதன் மூலம் ஒரு முஸ்லிமின் சாதாரண வாழ்வில் எத்துறை சார்ந்தும் பிரச்சினைகள் எழுந்துவிடக் கூடாது என்பதில் அக்கறை செலுத்ததப்பட்டுள்ளமை தௌpவாகின்றது.

வாரிசுரிமையூம் ஏனைய சமூகங்களும்
சொத்து செல்வம் என்பது வாழ்வியலின் இன்றியமையாத விடயங்கள் என்பதன் அடிப்படையில் ஒவ்வொரு சமூகமும் இறந்த மனிதரின் சொத்து தொடர்பில் கையாள வேண்டிய பாரம்பரியமான அல்லது சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறான ஒழுங்குகளைப் பின்பற்றி வந்துள்ளனர். பொதுவாக எல்லாச் சமூகத்தினரும் ஆணுக்கு மட்டுமே வாரிசுரிமை போய்ச்சேர வேண்டுமென்பதில் பெருமளவூ ஒத்திசைந்து செயற்பட்டுள்ளனர். அதேவேளை பெருமளவில் பெண்கள் புறக்கணிக்கப் பட்டுள்ளமையூம் தௌpவாகத்தெரியக் கூடியவொன்றாகும். !

உரோமர்கள்இ கிரேக்கர்கள் - வீரம் நிறைந்த பரவான்களான ஆண்களுக்கு சொத்து வழங்கும் பாரம்பரிய முறையை பின்பற்றினர்.!
இந்துக்கள் - புராதன காலத்தில் பெண்மக்களுக்கு வாரிசுரிமைப் பங்கினை அளிக்கவில்லை.!
பௌத்தர்கள் - ஆண்மக்களுக்கே சொத்துரிமை வழங்கினர்.!
ய+தர்கள் - ஆண் குழந்தை இருக்க மனைவி பெண்களுக்கு சொத்தில்லை. மூத்தவர் இளையவர் இருவரின் அளவூ பங்கைப் பெற்றார். ஆண் மகன் மகனின் மகன் இல்லாத போது மகளின் மகனுக்கு சொத்து கிட்டும். ஆண்மக்களே இல்லாத போது மகள் மனைவிக்கு கிட்டும்.
! ஜாஹிய்யாக் காலத்தவர் -
1) வீரமும் ஆண்மையூம் நிறைந்த ஆண்மகனுக்கு வழங்கினர்.
2) பரஸ்பர உடன்படிக்கை மூலம் பகிர்ந்து கொண்டனர்.
3) வளர்ப்பு மகனை வாரிசாகக் கருதி சொத்துக்களை வழங்கினர்.
இலங்கை நடைமுறையில் - ரோமன் டச்சுப் பொதுச்சட்டம், கண்டியர் சட்டம், தேசவழமைச் சட்டம் என்பனவற்றின் ஆரம்ப நிலைகள் ஆணுக்கான பாரம்பரிய உரிமையை வலுவூ+ட்டுவதாகவே உள்ளன. ஆனால் இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தின் நியாயமான பங்குபிரித்தலானது தீர்க்க தரிசனத்துடன் ஒளிர்கின்றது.இஸ்லாத்தின் கண்ணோட்டத்தில் வாரிசுரிமை. முழுவாழ்வையூமே இபாதாவாக்கி நோக்கும் இஸ்லாத்தின் பார்வையில் வாரிசுரிமையூம் ஒரு இபாதாவாகும். அது தொடர்பிலான அறிவை வளர்த்துக் கொள்வது பர்ளுகிபாயா எனக் கூறக்கூடிய அளவில் வாரிசுரிமை குறித்துப் பேசுகின்றது.

இறந்தவர் விட்டுச் சென்ற சொத்தை ‘தரிகா’ என சுட்டி அது வாரிசுகளுக்கிடையில் நியாயமான முறையில் பகிரப்படுவதற்கான அனைத்துச் சட்ட ஒழுங்குகளையூம் இறையாணையாகப் பிறப்பிக்கின்றது. “மரணமடைந்த தாய் தந்தையரும் நெருங்கிய உறவினரும் விட்டுச் சென்ற சொத்தில் ஆண்களுக்குப் பங்குண்டு. இதுபோலவே தாய் தந்தையரும் நெருங்கிய உறவினரும் விட்டுச் சென்ற சொத்தில் பெண்களுக்கும் பங்குண்டு. இச்சொத்து குறைவாகவோ அதிகமாகவோ இருந்தாலும் சரியே. இந்தப் பங்கு அல்லாஹ்வால் நிர்ணயிக்கப்பட்டதாகும்.”(4:7) என அல்குர்ஆன் வாரிசுச் சொத்துத் தொடர்பில் ஆணும் பெண்ணும் பங்கு பெறக்கூடியவர்கள் என தௌpவூபடுத்துகின்றது. “உங்கள் குழந்தைகள் விடயத்தில் ஞ உங்களுக்குக் கட்டளை பிறப்பிக்கின்றான். இரு பெண்களின் பங்கைப் போன்று ஓர் ஆணுக்கும் இருக்கின்றது.”(4:11) எனவூம் வாரிசுச் சொத்துப் பங்கீட்டுக்கான அடித்தளத்தை விளக்குகின்றது.

இங்கு ஆணுக்கான மிகைப் பங்கு என்பது ஆணுக்கான குடும்ப சமூகப் பொறுப்புக்களை உணர்த்துகின்றது. “நீங்கள் வாரிசுரிமைச் சட்டங்களை கற்று அவற்றைப் பிறருக்குக் கற்பிப்பீர்;களாக. ஏனெனில் அவை கல்வியின் அரைவாசிப் பகுதிக்குச் சமனாகும். இக்கலை மறக்கக் கூடியதும் ஆகும். இதுவே எனது சமூகத்திலிருந்து அகற்றப்படும் முதல் அம்சமுமாகும்.” எனக் குறிப்பிடும் ஹதீஸ் வாரிசுரிமைக் கலையின் முக்கியத்துவத்தை மிகத் தௌpவாக விளக்கிக் காட்டுகின்றது. அத்தோடுஇ “உங்கள் வாழ்க்கையின் ஆதாரமாக இருக்கும் செல்வத்தை அதனைப் பயன்படுத்தத் தெரியாத மூடர்களிடம் கொடுத்துவிடாதீர்கள்” என்ற எச்சரிக்கையூம்இ “தனது செல்வத்தைப் பாதுகாப்பதற்காக போராடி மரணிப்பவர் ஷஹீத் ஆவார்” (முஸ்லிம்) எனக் குறிப்பிடும் செய்தியூம் பராயிழ் நடைமுறைப்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றது.

வாரிசுரிமையின் நடைமுறையூம் சட்டதிட்டங்களும் இறந்தவரின் சொத்துக்கள் தரிகா என அழைக்கப்படுகின்றது. ஒரு சொத்து பங்கீட்டுக்குரிய சொத்தாக மாற வேண்டுமெனில் அது ஹலாலாக இருக்கவேண்டும். ஹராமானவை தரிகாவில் அடங்காது. இச்சசொத்துக்கள்
பகிர்வூக்குரிய நிலையை அடைய வேண்டுமெனில் பின்வரும் போதனைகள் பூர்த்தியாக்கப்பட வேண்டும்.
1. சொத்துரிமையாளர் மரணித்திருக்கவேண்டும். அல்லது இயற்கை மரணமாக இருக்கவேண்டும்;. கொலையாக அல்லது திடீர் மரணமாகவோ இருந்தால் அது பற்றிய புலன்விசாரணை மேற்கொள்ளப்படும். அது பற்றிய தீர்வூ வரும் வரை தரிக்காவின் பகிர்வூ நிறுத்தி வைக்கப்படும்.
2. சொத்துரிமையாளர் மரணிக்கும் போது வாரிசுகள் உயிருடன் இருப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
3. வாரிசுக்கு வாரிசுரிமையைத் தடை செய்யூம் காரணிகள் இருக்கக் கூடாது.

வாரிசுக்கு வாரிசுரிமையைத் தடை செய்யூம் காரணிகள்
1. கொலை :கொலை செய்தவர் வாரிசாக மாட்டார் ஷாபிஈ மத்ஹபின்படி எல்லாக் கொலையாளிகளும்இ ஹனபி மத்ஹபின்படி கிஸாஸ் கப்பாராவூக்கு உட்படாத கொலைஇ துhக்கம்இசித்த சுவாதீனமற்ற நிலைஇசட்டரீதியாக ஆகுமாக்கபக்பட்ட நிலைகளில் கொலை விதிவிலக்காகும்.

2. ரித்தத் : ஒரு முஸ்லிம் காபிருக்கு வாரிசல்ல காபிர் முஸ்லிமுக்கு வாரிசல்ல (புஃமு) ஷாபிஈ மத்ஹபின்படி ஒருவன் முஸ்லிமாக இருக்கும் போது சம்பாதித்தவை வாரிசுச் சொத்து. மதம் மாறிய பின் சம்பாதித்தவை பைதுல்மாலில் சேர்க்கப்படும்.

3. அடிமை : அடிமை வராசத்தை பெறவூம் மாட்டான். ஏற்படுத்தவூம் மாட்டான்.

4. வளர்ப்புப் பிள்ளை : வாரிசாக மாட்டார். “அவ்வாரே ஞ சுவீகாரப் பிள்ளகைளை உங்களுடைய புதல்வர்களாக ஆக்கவில்லை. வளர்ப்பு மகன் சொந்த மகனாவான் என்று கூறுவது போன்றுஇவையாவூம் உங்களுடைய வாய்களால் சொல்லும் வெறுமு; வார்த்தைகள் மட்டுமேயாகும்.”வாரிசுகள் இல்லையாயின். வாரிசுகள் இல்லையென அறியப்படும் பட்சத்தில் குறித்தவரால் வஸிய்யத் செய்யப்பட்டவருக்கு முழுச் சொத்தும் சென்றடையூமென இமாம் ஷாபிஈ றஹ் அவர்களும் 1/3 பங்கு வஸிய்யத் செய்யப்பட்டவருக்கும் ஏனையது பைத்துல் மாலுக்கும் சென்றடையூம் என இமாம் அபூஹனீபா றஹ் அவர்களும் கூறுகின்றனர்.
கலாலா : தகப்பன் பாட்டன் பிள்ளை பேரப்பிள்ளைகள் எனும் வாரிசுகள் அற்ற சொத்துக்கள்.(4:11,4:176)
வாரிசுச் சொத்துக்கள் பங்கிடப்பட முன்னர் அவற்றிலிருந்து நிறைவேற்ற வேண்டிய விடயங்கள்.
மரணித்தவரின் வாரிசுகள் ஜனாஸாக் கடமைகளை தமது சொந்தப் பொறுப்பில் எடுக்கும் பட்சத்திலும் கடன் வஸிய்யத் இல்லாத பட்சத்திலும் நேரடியாக பகிர்வூக்கு செல்லலாம்.

1. ஜனாஸாவூக்குரிய கடமைகளை நிறைவேற்றல். ஜனாஸாவூக்குரிய கடமைகளில் குறை ஏற்படாதவாரும் வாரிசுகளின் உரிமைகளைப் பாதிக்காத வகையிலும் அதனை நிறைவேற்ற வேண்டும்.

2. கடன் பூர்த்தியாக்கப்படல். தரிகாவில் நிறைவேற்றப்படவேண்டிய அடுத்த பிரதான கடமை கடனை நிறைவேற்றலாகும். இது இரு பகுதிகளைக் கொண்டிருக்கும்.

1.அல்லாஹ்வூக்கு செலுத்த வேண்டிய கடன். ஜகாத், நத்ர்இகப்பாரா. பித்யா, வஸிய்யத், தமு. ஷாபிஆ மத்ஹப்: அல்லாஹ்வூக்கான கடன்களுக்கு முன்னுரிமையளிக்க வேண்டும். ஹனபி மத்ஹப் வாரிசுகள் விரும்பும்போது நிறைவேற்றலாம். கத்ஸமிய்யா ரலி தனது தந்தையின் ஹஜ் தொடர்பில் கேட்டவை உதாரணமாகும். எவ்வாறாயினும் அடியார்களின் கடனை அடியான் மன்னிக்காதவரை அல்லாஹ் மன்னிக்கமாட்டான்.

2. மனிதர்களுக்குப்பட்ட கடன். இதில்
1) தனக்காகப்பட்ட கடன்
2) பிறருக்காகப்பட்ட கடன் என்பன கடன். ஒரு முஃமின் கடன்பட்டிருப்பின் அவன் அதனைத் திருப்பிக் கொடுக்கும்வரை சுவனம் நுழைய மாட்டான். (திரிமிதி) ஷஹீதான ஒருவரின் அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படும் கடனைத் தவிர (முஸ்லிம்)
3. வஸிய்யத்தை நிறைவேற்றல் இது மரண சாசானம் ஆகும். தற்கால உயிலும் இப்ப்pரிவில் இடங்கும். ஜனாஸாச் செலவூம் கடனும் செலுத்தியதும் போக மீதமுள்ள சொத்தில் இருந்து மரணித்தவரின் வஸிய்யத் நிறைவேற்றப்படும். ஒருவர் தான் இறந்தபின் தனது சொத்தில் இன்னுமொருவருக்கு வழங்கவேண்டும் என பணிப்பதற்குரிய அதிகூடிய எல்லை 1/3 மட்டுமே. அதற்கு மேல் செய்யப்படும் வஸிய்யத் செல்லுபடியாகாது. ... இறந்து போனவர் செய்திருந்த வஸிய்யத் நிறைவேற்றப்பட்ட பின்பும் அவருடைய கடன் அடைக்கப்பட்ட பின்பும்தான் . ஆனால் அந்த மரணசாசாணம் யாருக்கும் கேடு விளைவிக்காததாக அமைந்திருக்க வேண்டும். இது ஞ இட்ட கட்டளை யாகும். ஞ நன்கறிந்தவனாகவூம் மென்மையான இயல்பு டையவனாகவூம் இருக்கின்றான். (4:12) வாரிசுகளுக்கு வஸிய்யத்தில்லை. அனந்தகாரருக்கு வஸிய்யத் செய்ய முடியாது. வஸிய்யத் செய்பவர் அதனைச் சாட்சிகளோடு செய்வதே சிறந்தது. அது எழுத்து மூலம் வைக்கப்படுவதும் சிறந்ததாகும்.“யூத்தம்- நோய்- ஹஜ்ஜதுல் விதாவூடைய ஆண்டு. நபியவர்கள் நலன் பார்க்க வருகை தந்தார்;கள். இது மாபெரும் சோதனையாகவூள்ளது. அதிலிருந்து மீளுவது கடினம் என்றே நினைக்கின்றேன். நான் வசதியூடையவன். எனக்கு மகள் மட்டுமே உள்ளாள். 2/3 பங்கை வஸிய்யத் செய்யவா? வேண்டாம் என்றார்கள்.1/2....?இ ..1/3 வஸிய்யத் செய்யவா..? என வினவ மூன்றிலொரு 1/3 பகுதியூம் அதிகமே. நீங்கள் உங்கள் வாரிசுதாரர்களை மக்களிடத்தில் யாசகம் கேட்கும் நிலையில் ஏழைகளாக விட்டுச் செல்வதை விட பணக்காரர்களாக விட்டுச் செல்வது நல்லது. அல்லாஹ்வின் திருப்தியைத் தேடிய நிலையில் நீங்கள் செலவூ செய்கின்ற எந்தச் செலவினங்களும் இது உங்கள் மனைவியின் வாயில் நீங்கள் ஊட்டுகின்ற இனிப்புப் போன்ற வஸ்துக்களும் உட்பட அத்தனைக்கும் கூலி கொடுக்கப்பட்டே தீருவீர்கள்.”(புகாரி) ஸஃது இப்னு அபீவக்காஸ் (ரலி) வாரிசுகளும் அவர்களின் பிரிவூகளும். தரிக்காவிற்கான கடமைகள் நிறைவேற்றப்பட்ட பின்னர் மீதமுள்ள சொத்துக்கள் பெறத் தகுதியூடையவர்கள் மத்தியில் பகிர்ந்தளிக்கப்படும்.
வாரிசு
வாரிசு என்ற அடையாளத்தைப் பெற பின்வரும் உறவூத்தொடர்பு இருக்க வேண்டும்.
1/ இரத்தத் தொடர்பு
2/ திருமணத் தொடர்பு
3/ எஜமான் அடிமைத் தொடர்பு (விடுதலை செய்ய ப்பட்ட அடிமைக்கு யாருமில்லாத பொது எஜமான் வாரிசாவார்.) இவ்வடிப்படையில் வாரிசுச் சொத்தைப் பகிரும் போது மரணித்தவரோடுள்ள தொடர்பினடிப்படையில் வாரிசுகள் மூன்று .
வாரிசுப் பிரிவூகள்
1. அஸ்ஹாபுள் புரூள் பாகம் நிர்ணயிக்கப்பட்டவர்கள் - பர்ள் கடமையாக்கப்பட்டவர்கள் எனும் இப்பிரிவினர் குறித்தவொரு பங்குக்கு உரித்துடையோர் என ஷரீஅத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களாவர். பர்ள் அடிப்படையில் பங்;கினைப் பெறுவர். மரணித்தவரின் கணவன்இ மனைவிஇ பாட்டன்இ பாட்டிஇ மகன்இ மகள்இ மகளின் மகன்இ உடன் பிறந்த சகோதரிஇ தந்தை வழிச் சகோதரிஇ தாய்வழிச் சகோதரிஇ சகோதரன் என்போர் இப்பிரிவில் இடங்குவர்.ஆண் - கணவன்இ பாட்டன்இ மகன்இ மகளின் மகன்இ சகோதரன் பெண் -
2. அல் அஸபா - அஸ்ஹாபு பித்தஹாஸீப் எச்சதாரர்கள். நிர்ணயிக்கப்பட்ட பங்குகளைப் பெற்றுக்கொண்டது போக மீதமுள்ளதைப் பெறத் தகுதியானவர்கள். இவ்வஸபா மூன்று பிரிவாக பிரிக்கப்படுவதுண்டு.
1) நேரடி அஸபா - மகன் மகளின் மகன்இ தந்தை பாட்டன் சகோதரர்கள்இசகோதரர்களுடைய மகன்மார்இசிறிய பெரிய தந்தைஇஅவர்களுடைய மகன்கள்.
2) பிறர் மூலம் அஸபா - மகனுடைய மகன்இ மகள்இ இருவழி சகோதரர்களுடன் இருவழிச் சகோதரிஇதந்தை வழிச் சகோதரர்களுடன் தந்தை வழிச் சகோதரி
3)பிறர் உடன் மரணித்தவரின் மகனுடன் அல்லது மகனின் மகனுடன் மரனித்தவனின் சகோதரன் அஸபாவாகிறான்.
3) அல் அர்ஹாம். பெண்வழி உறவைக் கொண்டோர். துhரத்து உறவினர். மகளின் பிள்ளைகள்இ சகோதரிகளின் குழந்தைகள்.பங்குகளும் அவற்றுக்குரித்தானோரும் 1. 1ஃ4 பாகம் பெறுவோர் :- கணவன் இ மனைவி (2) 2. 1ஃ2 பாகம் பெறுவோர் :- கணவன்இ மகள்இ மகளுடைய மகள்இ உடன்பிறந்த சகோததரிஇ தந்தை வழிச் சகோதரி(5) 3. 1ஃ8 பாகம் பெறுவோர் :- மனைவி 4. 1ஃ3 பாகம் பெறுவோர் :- தாய்இ தாய்வழிச் சகோதரி (2) 5. 2ஃ3 பாகம் பெறுவோர் :- முன்னர் கூறப்பட்ட 1ஃ2 பாகம் கிடைப்போரில் இருவருக்கு மேற்பட்ட தொகையினர் இருப்பின் 2ஃ3பாகம் கிடைக்கும். மகன்மார்இ மகளின் மகன்மார். 6. 1ஃ6 பாகம் பெறுவோர் :- தந்தைஇதாய்இபாட்டன்இமகளின் மகள்இதந்தைவழிச் சகோதரிஇபாட்டிஇதாய்வழிச் சகோதரன்இல்லது சகோதரி ஒருவர்.பங்கீட்டின் பொது எழும் பங்கு பிரித்தல் முறைகள்.¨ ஹஜ்ப் - (ஹாஜிப்இஹிஜாப் - மறைத்தல்.) சொத்து பகிரும் போது முதல் தர வாரிசுகள் இருப்பதனால் வேறு சிலரது பங்கு குறையூம் அல்லது முற்றாக இல்லாமல் போகும். 1. ஹஜ்புன் நுக்ஸான் - பங்கின் அளவூ குறைதல் மனைவி 3ஃ24 மகன் 14ஃ24 மகள் 7ஃ24 (மனைவியிருக்க குறைதல்) 2. ஹஜ்புல் ஹிர்மான் - பங்கு முற்றாக கிடைக்காமல் பொதல்.¨ ஹவ்ழ் - வாரிசுத் தொகைக்கேற்ப பங்குத்தொகையை அதிகரித்து திருப்பிக்கொள்ளல்.¨ ரத்து - சுருக்குதல். பங்குத்தொகையை வாரிசுக்கேற்ப குறைவாகப் பிரித்தல்¨ குன்ஸா - ¨ வாரிசு கருவாக இருத்தல்¨ வாரிசு காணாமற் போயிருத்தல்.¨ தனது பங்கைவிட்டு வெளியேறல்.இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தின் நோக்கமும் நடைமுறை உலகில் அதனால் எதிர்பார்க்கப்படும் பயன்களும் இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டங்கள் குடும்ப சமூகப் பொருளாதார நலன்களையூம் மேம்பாட்டையூம் இலக்காகக் கொண்டு செயற்படத்தப்படுகின்றது. அத்தகைய பயன்பாடுகளாவன. பெற்றார் பிள்ளைகள் தொடர்பான குடும்ப உறவை வலுப்படுத்தக் கூடியதாகவூம் குடும்பத்தின் புரிந்துணர்வூ வளர்ச்சிக்கு அடித்தளமிடக் கூடியதாகவூம் இஸ்லாமிய வாரிசுரிமைக் கோட்பாடு காணப்படுகின்றது. தௌpவூபடுத்தப் பட்டிருக்கும் விதிகள் மூலம் வாரிசுதாரர் ஒவ்வொருவருக்கும் கிடைக்கும் பங்குகள் துலாம்பரமானது என்ற வகையில் சொத்துக்காக உட்பூசல்கள் கிளம்ப வாய்ப்பு ஏற்படுவதில்லை. அத்தோடு சகோதரர்களுக்கு மத்தியில் இழுபறி நிலை ஏற்படும் நிலையூம் அகன்று விடுகின்றது. பலம் வாய்ந்தவர்களின் கையோங்கும் நிலையூம் தடுக்கப்பட்டு விடுகின்றது. குரோதம்இ வஞ்சகம். பொறாமை போன்ற கீழ்த்தர உணர்ச்சிகள் அகன்றுவிடுகின்றன. அதேவேளை சிறந்த அந்நியோன்யமான குடும்ப சீராக்கநிலை தோன்றி புரிந்துணர்வோடு செயற்படும் நிலை தோன்றுகின்றது. அன்புஇபாசம்இகருணை ஏற்பட்டு குடும்ப உறவூ ஸ்திரமடைகின்றது. உரிமைகள் பாதுகாக்கப்பட்டு உறவூகள் பேணப்படுகிபன்றன.“உங்களுடைய பெற்றௌர்களிலும் உங்களுடைய பிள்ளைகளிலும் உங்களுக்கு நன்மை செய்வதில் யார் மிக நெருக்கமாக இருக்கின்றார்கள் என்பதை நீங்கள் அறியமாட்டீர்கள். இப்பங்குகளை அல்லாஹ் நிர்ணயம் செய்துள்ளான்.” 4:11 சமூக விளைவூகள்குடும்பங்கள் இணைந்த சமூகத்தின் சீரான இயங்குகைக்கு வாரிசுரிமைக் கோட்பாடு சிறந்த வழியாகும். குடும்ப உறவூக@டாக சமூக அங்கத்தினர்கள் மத்தியில் பரிந்துணர்வூஇ ஏற்றத்தாழ்வற்ற நிலைஇ ஐக்கியம் என்பன பேணப்படும். குற்றச் செய்ல்கள்இ வறுமையால் எதிர்நோக்கும் சமூகப் பிரச்சினைகள் அகலும்.பொருளாதார விளைவூகள் வாரிசுகளின் வளர்ப்பில் பொறுப்புதாரர்களுக்கிருக்கும் பங்கு மிகப் பிரதானமானதாகும். பெற்றெடுத்த பிள்ளைகளை கையேந்தும் நிலையில் விட்டுச் செல்ல முடியாது. எனவே மக்களின் பொருளாதார வளத்தை உறுதிப்படுத்தம் பொறுப்பு பெற்றௌரைச் சார்ந்துள்ளது. அவர்களை தொழில் முறையில் ஈடுபடச் செய்வதுஇ பொருளாதார ரஷுதியாக பலப்படுத்துவதுஇ உழைக்கத் துhண்டுவதுஇ ஒரு சிலரிடம் மாத்திரம் சொத்துக் குவிவதால் ஏற்படும் பாதிப்புக்களை அராஜகங்களை அகற்றுவதுஇ வாரிசுகளை குற்றச் செயல்கசளில் இருந்து பாதுகாப்பது போன்ற எண்ணிறைந்த பயன்களைப் பெற்றுக் கொள்ளலாம். வஸிய்யத்இ அன்பளிப்புக்க@டாக சொத்துக்களை பகிர்ந்தளிக்கும் போது சமூகத்தில் கீழ் மட்டத்திலிருப்பவர்கள் பயனடைந்து அவர்களது வாழ்வொழுங்கை சீராக்கிக் கொள்ள வழி பிறக்கும். “பங்கீடு செய்யூம் போது வாரிசு அல்லாத உறவினர்களோ அநாதைகளோ வறியவர்களோ வந்தால் அச்சொத்திலிருந்து அவர்களுக்கும் சிறிது வழங்குங்கள். மேலும் அவர்களிடம் கனிவாகப் பேசுங்கள்”. 4:8 வாரிசுரிமைசட்டங்கள்செயன்முறைவிளைவூகள் தொகுப்பும் விரிவூரையூம்: எம். எம். ஹிதாயத்துல்லாஹ்

No comments:

Post a Comment